21. திருநாவுக்கரசு நாயனார் (வாகீசர் பெருமான்)

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 21
இறைவன்: பசுபதீஸ்வரர்
இறைவி : திரிபுரசுந்தரி
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : வேளாளர்
அவதாரத் தலம் : திருவாமூர்
முக்தி தலம் : திருப்புகலூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : சித்திரை - சதயம்
வரலாறு : திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்னும் தலத்தில் வேளாளர் மரபில் புகழனார் என்னும் பெருந்தகைக்கும் மாதினியார் என்னும் மங்கை நல்லாளுக்கும் திருமகனாக திலகவதி என்னும் பெண்ணரசிக்கு இளவலாக மருள்நீக்கியார் திருஅவதாரம் செய்தார். மணப்பருவம் வந்துற்ற திலகவதியாரைச் சோழ சேனாபதியாக விளங்கிய கலிப்பகையார் என்பவருக்கு மணமுடிக்க ஏற்பாடுகள் நடந்தன. அவ்வேளையில் தந்தையாரும் தாயாரும் சிவபதம் அடைந்தனர். திருமணத்திற்கு முன்பே போரில் கலிப்பகையார் மறைந்தார். வாழ்க்கை ஏற்படுத்திய வடுக்கள் திலகவதியாரை உயிர் துறக்க வழிப்படுத்த, தம்பியார் வேண்டியதற்கு இணங்க அவர் பொருட்டு வாழத் தலைப்பட்டார். காலம் மருள்நீக்கியாரை சமணத்தில் சேர்த்தது. அதில் அவர் தலைவரானார். தம்பியின் நிலை கண்டு மனம் சோர்ந்த திலகவதியார் திருவதிகை இறைவனை தம்பியைப் பரசமயக் குழியில் இருந்து மீட்க வேண்டினார். அவரும் அதற்கு திருவுளம் பற்றினார். மருள்நீக்கியரைச் சூல நோய் பற்றியது. தமக்கையாரின் அறிவுரைப்படி திருவதிகை வீரட்டானேஸ்வரரைப் பணிந்து கூற்றாயினவாறு என்று தொடங்கி தேவாரம் பாட ஆரம்பித்தார் சுவாமிகள். திருநாவுக்கரசு என்று உலகேழும் அறியச் சொன்னார் இறைவர். தம் சமயத்தை விடுத்து மீண்டும் சைவம் சார்ந்ததால் வெகுண்ட பல்லவ மன்னன் பல வகையிலும் சுவாமிகளுக்கு சமணர்களோடு சேர்ந்து துன்பங்களைக் கொடுத்தான். இறைவன் திருவடியைப் பிடித்த நாவரசர் இனித் துன்பமில்லை எந்நாளும் இன்பமே என்றும் என் கடன் பணி செய்து கிடப்பதே என்றும் உறுதிப்பாட்டில் நின்றார். இறையருளால் பல அற்புதங்களை நிகழ்த்துகிறார். இறுதியில் திருப்புகலூரில் இறைவன் திருவடியை அடைந்தார்.
முகவரி : அருள்மிகு. அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர் (திருக்கண்ணபுரம் வழி) – 609704 நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : தொலைபேசி : 04366-29300
திரு.முத்துராம ரெட்டியார் தொலைபேசி : 041442-247707
திரு. கயிலைமணி. வை.ஆறுமுகம் அலைபேசி : 9486683375

இருப்பிட வரைபடம்


மேவுற்ற இவ் வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால் 
பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வளப் பதிகத் தொடைபாடிய பான்மையினால் 
நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின் நன்நாமம் நயப்புற மன்னுக என்று 
யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் இடையே ஒருவாய்மை எழுந்ததுவே

- பெ.பு. 1344
பாடல் கேளுங்கள்
 மேவுற்ற


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க